Saturday, April 17, 2010

உன்னை பற்றி..

மோதலில் ஆரம்பித்தது நம் நட்பு
ஆதலினால் தான்..
மோதலால் வளர்கிறது நம் நட்பு.

நமக்குள்ளே நெருக்கத்தை ஏற்படுத்தியது
நம் உரையாடல்கள் அல்ல,
நம் மௌன நிமிடங்கள்.

எப்பொழுது என்னிடம் உனக்கு நம்பிக்கை வந்தது? - ஒரு நாள் அவளிடம் கேட்டேன்.
அவள் சொன்னால்,நான் பார்க்காத பொழுதும்,
என் கண்களை பார்த்து நீ பேசிய பொழுது!

தனிமை..
உன்னை பார்காத பொழுது தோன்றவில்லை.
உன்னை பற்றி நினைக்காத பொழுது தொற்றிக்கொண்டது.

நம் முதல் சந்திப்பு
நம் முதல் பரிசு
நம் முதல் மோதல்
நம் முதல் கோபம்
இப்படி..
எந்த முதலும் நினைவில் இல்லை.
ஆனால், நம் முதல் பிரிவு மட்டும்,
நினைக்க மறந்தும் முடியாமல்.

4 comments:

  1. Macha i dont know what to say...speechless..i cant even correct you in grammar or punctuation...all iam saying is keep up the work....basic rule of thumb is stick to no specific topics like emotions...love...sadness...heartbreak etc...write diff things from facets of life...hope u do good..cheers.

    ReplyDelete
  2. தம்பி ,


    இந்த கவிதை காதலின் மிச்சம் அல்ல
    காதலின் உச்சம் ....
    வர்ணிக்க வார்த்தை இல்லை ...
    அற்புதம் என்பதே அற்பம் தான் இந்த கவிதையை பாராட்ட ...
    எழுத்து தவம் கொள் ...
    காதல் மோதல் மட்டும் இல்லாமல் பல வித கருக்களையும் தொட்டுவிடு உன் எழுத்தினால் ....!
    இன்னும் உன் வெகு படைப்புகள் கண்டிட காத்திருக்கிறேன் ...
    வாழ்க வளமுடன் ...!!!!

    ReplyDelete
  3. cool ... nice one machi ... vaazhthukkal ...

    ReplyDelete
  4. Really felt as mine!!

    Good one Ashok.

    ReplyDelete